சினேக நடிப்பில் உருவான 3டி படம்! - பிரம்மாண்ட தயாரிப்பாளர் கைப்பற்றினார்
Monday July-29 2019

சினேகா திரெளபதி வேடத்தில் நடித்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகும் பிரம்மாண்ட 3டி தொழில்நுட்ப படமான  ‘குருஷேத்ரம்’ படத்தின் தமிழ் பதிப்பை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கைப்பற்றியுள்ளார்.

 

மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும், இந்த காவியத்தின் குருக்ஷேத்ர போரினை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை விருஷபாத்ரி புரொடக்‌ஷன் தயாரித்திருக்கிறது.

 

Gurushethram

 

நாகன்னா இயக்கியிருக்கும் இப்படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனன் வேடத்டில் தர்ஷன், கர்ணன் வேடத்தில் அர்ஜுன் சார்ஜா, கிருஷ்ணர் வேடத்தில் வி.ரவிச்சந்தர், அர்ஜுனன் வேடத்தில் சோனு சூட், சகுனி வேடத்தில் ரவிஷங்கர், சையியா வேடத்தில் ராக்லைன் வெங்கடேஷ், திரெளபதி வேடத்தில் சினேகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

 

ஹரி கிருஷ்ணா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெய் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜோ நி.ஹர்ஹ்சா எடிட்டிங் செய்திருக்கிறார். 

 

Producer Kalaippuli Thanu

 

முனி ரத்யா எழுதி தயாரித்திருக்கும் இந்த பிரம்மாண்ட படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இதன் தமிழ் பதிப்பை தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.

Related News

5341

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery