சூப்பர் ஸ்டார் பட்டத்தை உதறிய தனுஷ்!
Monday July-29 2019

வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘பட்டாஸ்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 ஆம் தேதி (நேற்று)  வெளியிடப்பட்டது.

 

இதற்கிடையே, நேற்று தனுஷின் பிறந்தநாள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதில் இரத்த தானம் முகாமும் நடத்தப்பட்டது.

 

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தனுஷுக்கு ‘இளைய சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் வழங்குவதாக அறிவித்தார்.

 

Producer Thanu

 

அவரை தொடர்ந்து பேசிய தனுஷ், தாணு அளித்த பட்டம் தனக்கு வேண்டாம், என்று நிராகரித்தார்.

 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “தாணு என் மீதான அன்பு மிகுதியால் பட்டம் கொடுத்தார். எனக்கு இந்த பட்டம் எல்லாம் வேண்டாம். தனுஷ் என்ற பெயர் மட்டுமே போதும். என் ரசிகர்களுக்கு அன்பான கோரிக்கை. யார் பகை காட்டினாலும் பொறுமையாக செல்லுங்கள். பதிலுக்கு பகையை காட்டாதீர்கள். விரைவில் அனைத்து ரசிகர்களையும் சந்திக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

 

நடிகர் ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்கியது தயாரிப்பாளர் தாணு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

5343

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery