விக்ரம் எடுக்கும் ரிஸ்க்!
Monday July-29 2019

‘கடாரம் கொண்டான்’ படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் விக்ரம், அதே உற்சாகத்தோடு தனது அடுத்தப் படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

 

’டிமாண்டி காலணி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் விக்ரமின் அடுத்தப் படத்தை இயக்குகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘விக்ரம் 58’ என்று அழைக்கின்றனர்.

 

ஆக்‌ஷன், த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித குமார் மற்றும் வியாகாம் 185 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், இப்படத்தில் விக்ரம் 25 கெட்டப்புகளில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை விக்ரம் அதிகபட்சமாக ‘ராஜபாட்டை’ படத்தில் 7 கெட்டப்புகளில் நடித்திருந்தார். மேலும், ஷங்கரின் ‘ஐ’ படத்தில் யாருமே நடிக்க முடியாது கெட்டப்பிலும் நடித்து அசத்தினார். கெட்டப்புக்காக எந்தவிதமான ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கும் விக்ரம், 25 கெட்டப்புகளில் நடிக்கும் புது ரிஸ்க்கை எடுக்க இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

 

ஒவ்வொரு கெட்டப்புகளுக்கும் பெரிய அளவில் வேறுபாட்டை காட்டும் விதத்தில் இந்த 25 கெட்டப்புகளும் இருக்குமாம். இதனால், இது விக்ரமுக்கு பெரிய ரிஸ்க்கான காரியமாகவும் இருக்கும், என்றும் கூறப்படுகிறது.

Related News

5345

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery