பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளர்களாக உள்ள 16 பேர்களில் இதுவரை நான்கு பேர் வெளியேற்றப்பட்டு விட்டனர். பாத்திமா பாபு, மீரா மிதுன், மோகன் வைத்யா, வனிதா என்று பிக் பாஸ் வீட்டுக்குள் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த நான்கு பேர்களில் பாத்திமா பாபு மற்று மோகன் வைத்யா ஆகியோர் மீது ரசிகர்களுக்கு பெரிய அளவில் கோபம் இல்லை என்றாலும், வனிதா மற்றும் மீரா மிதுன் மீது செம கடுப்பாகி இருந்தார்கள். ரசிகர்களிடம் இப்படி கெட்ட பெயர் எடுத்தால், பிக் பாஸ் வீட்டில் நிலைத்து நிற்கலாம் என்ற அவர்களது எண்ணத்தை உடைக்கும் வகையில் பிக் பாஸ் அவர்களை வெளியேற்றி அதிரடி காட்டினார்.
இந்த நிலையில், இந்த வாரம் எலிமினேஷ் ஆக உள்ள ஐந்தாவது போட்டியாளர் யார்? என்பது குறித்து பிக் பாஸ் வீட்டில் ஓபனாக நாமினேஷன் நடைபெற்றது. அதில், மதுமிதா, கவின், ரேஷ்மா, அபிராமி, சாக்ஷி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ரவுண்டில் இவர்கள் இடம்பிடித்திருக்க, இவர்களில் யார் எலிமினேட் ஆகப் போகிறார்கள் என்பது இன்னும் ஓர் இரு நாட்களில் தெரிந்துவிடும்.
எலிமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்த இவர்களுக்கு சக போட்டியாளர்கள் அளித்த வாக்குகள் இதோ,
கவின் - 6
மதுமிதா - 6
ரேஷ்மா - 4
சாக்ஷி - 3
அபிராமி- 2
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...