வைல்ட் கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த திருநங்கை!
Tuesday July-30 2019

100 நாட்களை கொண்ட பிக் பாஸ் போட்டி தற்போது 37 நாட்களை கடந்துவிட்டது. இதில் போட்டியாளர்களாக பங்கேற்ற 16 பேர்களில் நான்கு பேர் வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், தற்போதிருப்பவர்களில் மேலும் ஒருவர் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படுவர்.

 

பிக் பாஸ் வீட்டுக்குள் கொஞ்சம் ஓவராக நடிப்பவர்கள் மீது ரசிகர்கள் வெறுப்பை காட்டுவதால், அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதில் பிக் பாஸ் தீவிரம் காட்டி வருகிறார். அதனால் தான், வனிதா, மீரா மிதுன் போன்றவர்கள் வெளியேற்றபட்டார்கள்.

 

இதற்கிடையே, வைல்ட் கார்டு ரவுண்ட் மூலம் புதிய போட்டியாளர் ஒருவர் விரைவில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழை உள்ளார். அவர் யார்? என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், அந்த போட்டியாளர் தேர்வில் சேனல் நிர்வாகமும் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது சேனல் சார்பாக நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் ஒருவர் விரைவில் வைல்ட் கார்டு ரவுண்ட் மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார், என்றும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், சமீபத்தில் தொடங்கிய தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3-யில் வைல்ட் கார்டு மூலம் புதிய போட்டியாளராக திருநங்கை தமன்னா சிம்ஹாரத்திரி என்பவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

 

Transgender in Big Boss home

 

பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டிருக்கும் திருநங்கை தமன்னா, நடிகர் பவன் கல்யாண் கட்சியின் சார்பாக சமீபத்தில் தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

5349

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery