Latest News :

கிரிக்கெட் வீரரின் காதலியோடு வெளிநாடு பறக்கும் அதர்வா!
Tuesday July-30 2019

கோலிவுட்டின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான அதர்வா முரளி, கமர்ஷியல் படமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். ’பூமராங்’ படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குநர் கண்ணனுடன் கைகோர்த்திருக்கும் அதர்வாவுக்கு இப்படத்தில் ஜோடியாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

 

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவின் காதலி என்று சமீபகாலமாக கிசுகிசுக்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன், இப்படத்தின் ஹீரோயினாக நடிப்பது படத்தின் கூடுதல் சிறப்பாகும். இளம் ஜோடியான அதர்வா - அனுபமா பரமேஸ்வரன் இருவருக்குமிடையிலான கெமிஸ்ட்ரி நிச்சயம் ரசிகர்களை கவருவதோடு, ரொமாண்டிக் ரசிகர்களின் பேவரைட் படமாகவும் இப்படம் அமையும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்தில் சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற உள்ளது. பிறகு சில முக்கிய காட்சிகளுக்காக அதர்வா, அனுபமா உள்ளிட்ட படக்குழுவினர் வெளிநாடு பறக்க உள்ளனர்.

 

Actress Anupama Parameswaran

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கும் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனத்துடன், எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக உள்ளது.

Related News

5354

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

Recent Gallery