’பட்டாஸ்’ அனைத்து தரப்பினரையும் கவரும்! - தயாரிப்பாளர் நம்பிக்கை
Tuesday July-30 2019

தனுஷின் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது ‘பட்டாஸ்’ படத்தின் பஸ்ட் லுக். தனுஷின் 39 வது படமாக உருவாகும் இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். 

 

இப்படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன் படம் குறித்து கூறுகையில், ”இந்த மாபெரும் கொண்டாட்ட சந்தர்ப்பத்தில் எங்கள் ‘தயாரிப்பு எண் 34'ன் முதல் தோற்றத்தையும் தலைப்பையும் வெளியிட முடிவு செய்தபோது, தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ஆடம்பரமான விருந்து தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். ‘தனுஷ் ரசிகர்கள்’ என்று நான் கூறுவது, அவரை எப்போதும் கொண்டாடும் தீவிரமான ரசிகர்களை மட்டுமல்ல, சர்வதேச தளங்களுக்கும் அவரது ரசிகர் பட்டாளம் நீண்டுள்ளது. உலகளாவிய அளவில் அவர் தனது தனித்துவமான சோதனைகள் மூலம் ஒரு சுயமாக தனக்கென ஒரு தளத்தை நிறுவியுள்ளார். படத்தின் முதல் தோற்றம் மாஸ் மற்றும் கிளாஸ் இரண்டும் ஒன்றிணைந்திருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டியிருந்தது. இப்போது தனுஷின் வேடிக்கையான தோற்றத்தையும், 'பட்டாஸ்' என்ற தலைப்புக்கு ஏற்ப வண்ணங்களின் சுறுசுறுப்பான ஃப்ளாஷ்களையும் பார்க்கும்போது, இந்த திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, நிச்சயமாக அனைத்து தரப்பினருக்கும் ஒரு விருந்தாக மாறும் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம். சந்தேகத்திற்கு இடமின்றி, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மட்டும் அல்ல, அவர் தன் உடலை கச்சிதமாக வைத்திருக்கும் ஒரு நடிகர், அதனால் தான் ஃபர்ஸ்ட் லுக்கில் அவரது இளமை தோற்றம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மேலும், இயக்குனர் துரை செந்தில்குமார் அவரை மிக அழகாக காண்பிப்பதில் தனது சிறந்த அணுகுமுறையை வெளிப்படுத்தி வருகிறார். எனவே இந்த கூறுகள் ஒன்றிணைந்து பட்டாஸை ஃபர்ஸ்ட் லுக்கை மிகவும் சிறப்பாக ஆக்கியுள்ளன. சத்யஜோதி ஃபிலிம்ஸ் எப்போதும் குடும்ப பொழுதுபோக்கு படங்களை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம். பட்டாஸ் அந்த கொள்கைக்கு நியாயம் செய்யும் படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

 

துரை செந்தில்குமார் எழுதி இயக்கும் இந்த பட்டாஸ் படத்தில் தனுஷ், மெஹ்ரீன் பிர்ஸாடா, நவீன் சந்திரா மற்றும் சினேகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவை கையாள, இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் இரட்டையர்கள் இசையமைக்கிறார்கள். திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), விவேக் (பாடல்கள்), ஜானி (நடனம்), அனுவர்தன் - தாத்ஷா ஏ பிள்ளை (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

 

இப்படத்தை டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்க, ஜி சரவணன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

 

தற்போது முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்டப் படபிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Related News

5356

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery