மறைந்த இயக்குநர் மகேந்திரனின் நினைவைப் பற்றி பேசும் ‘சொல்லித் தந்த வானம்’ நூலை கே.பாக்யராஜ் வெளியிட்டார்.
மறைந்த யதார்த்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் நினைவைப் பற்றிப் பேசுகிற நூல் ’சொல்லித் தந்த வானம்’. இந்த நூலை மூத்த பத்திரிகை நிருபரும், எழுத்தாளருமான அருள்செல்வன் பலரது அனுபவங்களைத் தொகுத்து எழுதி இருக்கிறார். இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு தென் இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க அலுவலகத்தில் சமீபத்தில் எளிமையாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.பாக்யராஜ் பங்கேற்று நூலை வெளியிட, இயக்குநர் யார் கண்ணன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் இயக்குநர்கள் மனோஜ்குமார், மனோபாலா, ரமேஷ் கண்ணா, ஏ.வெங்கடேஷ், சண்முகசுந்தரம், லியாகத் அலிகான், சி.ரங்கநாதன், யுரேகா, கவிஞர் விவேகா, பின்னணிக் குரல் கலைஞர் ஹேமாமாலினி, மக்கள் தொடர்பாளர்கள் சக்தி சரவணன், ராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...