அடுல்ட் ஒன்லி காமெடி படம், என்ற சப் டைடிலோடு உருவாகியிருக்கும் ‘ஹர ஹர மஹாதெவகி’ படு ஆபாச திரைப்படமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆபாசம் என்பது காட்சிகளில் அல்ல வசனங்களில். படத்தில் நடித்துள்ள ஹீரோ, ஹீரோயின், காமெடி நடிகர்கள் என அனைவரும் இரட்டை அர்த்தத்தில் ரொம்ப ஆபாசமாக பேசியிருக்கிறார்களாம்.
நேற்று நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட ஒரு சில நிமிட டிரைலரிலேயே பல ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. அப்படியானால் முழு படமும் எப்படி இருக்குமோ, என்று திரையுலகினர் பதறுகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயந்தாரா’ படமும் இதுபோன்ற ஆபாச வசன படமாக வெளியாகி வெற்றி பெற்றதால், அதே பாணியில் ஹர ஹர மஹாதேவகி படத்தையும் படு ஆபசமாக எடுத்திருகிறார்கள். இப்படத்திற்கு சென்சார் ஏ சான்றிதழ் வழங்கியிருந்தாலும், இது போன்ற ஆபாச வசனங்களால் நிச்சயம் இளசுகள் தியேட்டருக்கு வருவார்கள் வசூலை அள்ளோ அள்ளு என்று அள்ளிவிடலாம், என தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இப்படத்தை தயாரித்துள்ள தங்கம் சினிமாஸ், தனது இரண்டாவது படத்திற்கு ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்று தலைப்பு வைத்துள்ளது. மொத்தத்தில், ஆபாச படத்தை ரொம்ப நேர்த்தியாக எடுத்து துட்டு பார்க்கும் ரூட்டியில் பயணிக்க தொடங்கிவிட்டது போல இந்த நிறுவனம்.
சமூக ஆர்வளர்களே எங்கே இருக்கீங்க...
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...