சினிமாவில் நடிகர், நடிகைகள் காதலிப்பது சகஜமான ஒன்று தான் என்றாலும், சில நேரங்களில் இந்த காதல் தொல்லையால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். அப்படி ஒரு இளம் ஹீரோவின் காதல் தொல்லையால், ஹீரோயினின் அம்மா ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குநர் பாலாவின் உதவி இயக்குநராக பணியாற்றிய நந்தன் சுப்பராயன் ‘மயூரன்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அறிமுக ஹீரோ, ஹீரோயின் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. கல்லூரி விடுகளில் நடக்கும் வெளி உலகிற்கு தெரியாத, அதே சமயம் அதிர வைக்கும் நிஜ சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், படத்தின் புரோமோஷனுக்காக இயக்குநர் ஹீரோ மற்றும் ஹீரோயினை அழைத்திருக்கிறார். அதற்கு, ஹீரோ வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன், என்று ஹீரோயினின் அம்மா கூறியிருக்கிறார்.
எதற்காக, என்று இயக்குநர் ஹீரோயினின் அம்மாவிடம் விசாரிக்கையில், ”என் மகள் கோடீஸ்வரி என்பதால், அவரை காதலிக்கிறேன் என்ற பெயரில், ஹீரோ தினமும் தொல்லை கொடுத்து வருகிறார்” என்று கதறியுள்ளார்.
அதே சமயம், ஹீரோயின் இல்லாமல் நான் மட்டும் புரோமோஷனுக்கு வர மாட்டேன், என்று ஹீரோவும் அடம் பிடிக்க, பணம் போட்டு படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்கள், என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள்.
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...