இந்த வாரம் பிக் பாஸில் எலிமினேட் ஆகப் போவது இவர் தான்! - லீக்கான சீக்ரெட்
Thursday August-01 2019

பிக் பாஸ் சீசன் 3 யில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆவதால் பெரும் பரபரப்புடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 35 நாட்களுக்கு மேல் கடந்திருக்கும் பிக் பாஸில் இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைஹ்யா, வனிதா, மீரா மிதுன் என நான்கு பேர் வெளியேறியுள்ளார்கள்.

 

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 12 போட்டியாளர்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருவர் வெளியேறப் போகிறார். அவர் யார்? என்பதை அறிந்துக்கொள்வதில் மக்கள் ஆர்வமாக இருக்க, அந்த ஒருவர் பற்றிய சீக்ரெட் தற்போது வெளியாகியுள்ளது.

 

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே முக்கிய போட்டியாளராக திகழ்பவர் இலங்கை பெண் லொஸ்லியா தான். ஓவியாவுக்கு எப்படி மிகப்பெரிய ரசிகர்கள் ராணுவம் உருவானதோ அதுபோல் லொஸ்லியாவுக்கும் உருவாகியுள்ளது. அதுமட்டும் இன்றி, லொஸ்லியா யாரை நாமினேட் செய்கிறாரோ அவர்களில் ஒருவரையே பிக் பாஸ் எலிமினேட் செய்வதோடு, ரசிகர்களும் அவர்கள் எலிமினேட் ஆக வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

 

அந்த வகையில், மோகன் வைத்யா மற்றும் மீரா மிதுனை லொஸ்லியா தான் நாமினேட் செய்தார். அவர்கள் பிக் பாஸால் எலிமினேட் செய்யப்பட்டார்கள்.

 

Sakshi and Madhumitha in Big Boss

 

அதேபோல், இந்த வாரம் மதுமிதா மற்றும் சாக்‌ஷி என இருவரை லொஸ்லியா நாமினேட் செய்திருப்பதால் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ரசிகர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் சாக்‌ஷி குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

5369

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery