பிரபல நடிகையும், நடிகர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியுமான லலிதா குமாரியின் அண்ணன் அருண் என்பவரின் 17 வயது மகள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்ரினா என்ற அந்த பெண் சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளார். இதையடுத்து, மகள் காணாமல் போனது குறித்து அருண் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அவர் காணாமல் போய், இன்றுடன் 5 நாட்கள் ஆகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தார் பெரும் கவலையில் உள்ளனர்.
இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை லலிதா குமாரி, ”எனது அண்ணன் அருணின் மகள் அப்ரிதா காணமால் போய் 5 நாட்கள் ஆகின்றன. அவரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. காவல் துறையில் புகார் தெரிவித்ததன் பேரில் அவர்கள் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறார்கள். ஆனாலும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவள் படித்து வந்த சர்ச் பார்க் பள்ளியில் இதை பற்றி விசாரித்த போது பள்ளியில் மொத்தம் 56 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், எங்களுக்கு சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள கேமராக்கள் வேலை செய்யாததால் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. காவல் துறைக்கும் போதியிஅ ஆதாரங்கள் பள்ளி அலுவலகத்திலிருந்து கிடைக்கவில்லை. பள்ளி மெத்தனம் காட்டுவது போல் தோன்றுகிறது.” என்று கண்ணீர் மல்க கூறினார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...