உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை வடபழனியில் நடைபெற்றது. திரைப்பட உதவி இயக்குநர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ஜாதி தொடர்பாக இயக்குநர்கள் பா.ரஞ்சித் மற்றும் அமீர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டிவிட்டரில் பா.ரஞ்சித்துக்கு எஸ்.வி.சேகர் கூறுகையில், தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித். தன் ஜாதியைப் பெருமையாக சொல்லும் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும், என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த ரஞ்சித், தலித் என்பது ஜாதியல்ல, ஆரியம்-ஜாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ரஞ்சித்துக்கு மேலும் பல ட்விட்கள் மூலம் பதில் அளித்த எஸ்.வி.சேகர், தம்பி, தலித் என்று சொன்னது நீங்கள் தான். ஆரியம் - ஜாதியம் ஒழிக்கும் விடுதலை கருத்தியல், நடைமூறை சாத்தியமில்லா கருத்தியல். காலம் உணர்த்தும். வெற்றி வேகம் தங்களின் பதில். வயதும் அனுபவமும் கூடக்கூட தெளிவு பெறுவீர்கள். என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார், என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...