’ஜாம்பவான்’, ‘வல்லக்கோட்டை’ சசிகுமார் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ராஜவம்சம்’ ஆகிய படங்களை தயாரித்திருக்கும் டி.டி.ராஜா, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக காவ்யா தாபர் நடிக்கிறார்.
சரண் இயக்கத்தில், பிக் பாஸ் ஆரவ் நடிக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான காவ்யா தாபர், தனது முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பை பெற்றவர், தொடர்ந்து பல பட வாய்ப்புகளுக்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.
அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ‘மெட்ரோ’ பட புகழ் ஆனந்த் கிருஷ்ணன் இயக்குகிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இணை தயாரிப்பை ராஜா சஞ்சய் கவனிக்கிறார்.
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...