பிக் பாஸ் சீசன் 3 யில் கவின் - சாக்ஷி காதல் கலாட்டா பரபரப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில், நடிகர் சரவணன், இயக்குநர் சேரன் இடையே நடந்த மோதல் அனைத்தையும் ஓரம் கட்டி விட்டது. இதற்கிடையே, வைல்ட் கார்டு மூலம் நடிகை கஸ்தூரி, இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக வெளியான தகவலாலும் நிகழ்ச்சியின் பரபரப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்த வார எலிமினேஷனின் இதுவரை வெளியான தகவல்கள் அனைத்தையும் பொய்யாக்கி, யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்துள்ளது.
இந்த வார எலிமினேஷன் பட்டியலில் சாக்ஷி, கவின், மதுமிதா, அபிராமி மற்றும் ரேஷ்மா ஆகியோர் உள்ளனர். இவர்களில் சாக்ஷி, தான் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகிறார், என்று கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகிக் கொண்டிருந்தது. அதை உறுதி செய்யும் வகையில் சில ஆதாரங்களும் வெளியானது.
ஆனால், தற்போது எலிமினேஷனில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று பிக் பாஸில் நிகழ்ந்துள்ளது. ஆம், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ரேஷ்மா வெளியேறியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
சாக்ஷி - கவின் காதல் விவகாரம், நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்திருப்பதால், அவர்களை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றிய பிக் பாஸ், ரேஷ்மாவை கழட்டி விட்டிருக்கிறார்.
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...