Latest News :

குத்துச்சண்டை வீரர்களுடன் நடிகர் அருண் விஜய் திடீர் சந்திப்பு!
Sunday August-04 2019

’பாக்ஸர்’ படம் மூலம் முதல் முறையாக குத்துச்சண்டை வீரர் வேடத்தில் நடிக்கும் அருண் விஜய், சென்னையில் திடீரென்று குத்துச்சண்டை வீரர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். 

 

அருண் விஜயின் இந்த திடீர் சந்திப்பு குறித்து விசாரிக்கையில், தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வீரர்களை பாராட்டும் விதமாகவே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. மேலும், ஒலிம்பிக்ஸ் கேம்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான குத்துச்சண்டை சேம்பியன்ஷிப் போட்டிகளில் ரன்னர் சேம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாடு பயிற்சியாளர் செந்தில்நாதனுக்கும் பாராட்டுக்களை அருண் விஜய் தெரிவித்தார். 

 

இது குறித்து அருண் விஜயிடம் கேட்டதற்கு, “இந்த வெற்றிக் களிப்பு 20 சாதனையாளர்களுடன் நின்றுவிடாது. நம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்குமான வெற்றி இது. என்னைப் பொருத்த வரை இந்த 20 பேரும் உண்மையிலேயே சாகசம் நிகழ்த்தியவர்கள். 

 

ஒரு விளையாட்டு வீரராகவோ, தடகள வீரராகவோ இருப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் குறிப்பாகக் குத்துச்சண்டை வீரரின் சாகசம் நிச்சயம் எளிதானதல்ல. அவர்கள் பெருமளவில் உடல் மற்றும் மன ரீதியாகத் தயாராக வேண்டியிருக்கும். ஒரு ஜென் துறவியின் மனப்பக்குவம் அவர்களிடம் இருக்க வேண்டும். தங்கள் செயல்பாட்டை திடீரென நிகழ்த்தும் ஆற்றல் அவர்களுக்கு அவசியமாகும். அதே சமயம் ஒவ்வொரு வினாடியையும் துல்லியமாக் கணித்துச் செயலாற்றவும் வேண்டும். தனிப்பட்ட முறையில் வெளியாகவிருக்கும் என்னுடைய, ‘பாக்ஸர்’ திரைப்படத்துக்காக நான் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்தப் பாத்திரத்தில் நடிக்க நான் மணிக்கணக்கில் பயிற்சி செய்தேன். ஆனால் இந்த வீரர்கள் தளராத முயற்சியோடு இரவு பகலாக, ஆன்மசுத்தியோடு வியர்வை சிந்துவதைப் பார்க்கும் போது உண்மையிலேயே திகைப்பாக இருக்கிறது. அதுவும் சில சமயங்களில் அவர்களுக்கான ஆதரவு என்பது மிகக் குறைவாக இருக்கும்போதும் அவர்களின் கடுமையான பயிற்சி வியப்பை ஏற்படுத்துகிறது.  

 

Arun Vijay meet boxers

அவர்களை நேரில் சந்தித்துப் பாராட்டுக்களையும் ஊக்குவிப்பையும் அளிக்க விரும்பினேன். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவர்கள் தங்களது அனுபவங்களையும், பயணத்தையும் என்னுடன் பகிர்ந்துகொண்ட போது நான் அவற்றால் ஆழமாக ஈர்க்கப்பட்டு உத்வேகம் பெற்றேன். அவர்கள் சந்தித்த சவால்களும், அவறை எதிர்த்து அவர்கள் போரிட்டதும் எனக்கு அதிகளவிலான ஊக்கத்தை அளித்தன. அவற்றை நான் என் வாழ்நாள் முழுவதும் சுவாசிக்க விரும்புகிறேன். மேலும் அவர்களின் தொடர்பு என் ஆன்மாவை ஊக்குவிப்பாலும், நேர்மறை எண்ணங்களாலும் மேன்மைப்படுத்தி நிரப்பியது. அவர்களுடன் நிரந்தரமான நட்பைத் தொடர விரும்புகிறேன்.” என்றவர், அவர்களுடையை வருங்கால தொழில்முறைச் சாதனைகள் அனைத்துக்கும் தான் உறுதுணையாக இருப்பேன், என்று உறுதியளித்தார்.

 

‘அக்னிச் சிறகுகள்’, ‘பாக்ஸர்’ மற்றும் ‘மாஃபியா’ ஆகிய படங்களில் படங்களில் நடித்து வரும் அருண் விஜய்க்கு இனி வரும் காலம் வெற்றிக்காலமாகவே அமையும் என்பது உறுதி.

Related News

5389

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

Recent Gallery