தற்போதைய காலக்கட்டத்தை பொருத்தவரை ஒரு படம் ஒரு வாரத்தை கடந்து ஓடினாலே வெற்றி என்ற நிலை இருக்க, கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி வெளியான ‘களவாணி 2’, 5 வது வாரத்திலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவதை பார்த்து கோலிவுட்டே அசந்து போயிருக்கிறது.
சற்குணம் இயக்கத்தில், விமல், ஓவியா, துரை சுதாகர் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ உள்ளாட்சி தேர்தலைமை மையமாக வைத்து, எதார்த்தமான கிராம மக்களின் வாழ்வியல் பதிவாக மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தில் ஹீரோ கதாபாத்திரம் பேசப்பட்டதை விட, வில்லன் கதாபாத்திரம் தான் மக்களிடம் அதிக பாராட்டை பெற்றது. காரணம், வித்தியாசமான வில்லன் வேடத்தில், அறிமுக நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின், இயல்பான நடிப்பும், எதார்த்தமான மேனரிசமும் தான்.
கதை தஞ்சை பகுதியில் நடப்பதால், முழு படமும் டெல்டா மாவட்டத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதனால் டெல்டா மாவட்ட மக்களுக்கு மிக நெருக்கமாக அமைந்த இப்படம், அப்பகுதிகளில் உள்ள சில திரையரங்குகளில் இன்னமும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஒடிக்கொண்டிருக்கிறது.
வெற்றி பெற்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகங்களாக வரும் பெரும்பாலான படங்கள் தோல்வியடைந்து வரும் நிலையில், இந்த ‘களவாணி 2’ மட்டும் ஐந்தாவது வாரத்திலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடுவது திரையுலகினரையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...