தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய், அவரது ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, தமிழக மக்களுக்கும் நெருக்கமானவராக இருக்கிறார். இதற்கு காரணம், அவரது நடிப்பு மட்டும் இன்றி, பொதுநல வாழ்வில் அவர் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகளும் தாம்.
அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக தான் நடிக்கும் படங்களில் சமூக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வரும் விஜய், அதற்காக உச்ச நடிகருக்காக கிடைக்கும் சொகுசுகளையும் தவிர்த்துவிட்டு, சாமண்ய மக்களில் ஒருவராக பிரதிபலிக்கிறார்.
அந்த வகையில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு ரசிகர்கள் முன்னிலையில், பொது இடத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஜய், பைக்கில் சீறிப்பாய்ந்து வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இது குறித்து ரசிகர்கள் அறிந்துக்கொண்டு அந்த இடத்தில் கூடினாலும், முன்னரே முடிவு செய்தது போல, அந்த காட்சியை அதே இடத்தில் படமாக்க வேண்டும், என்பதில் உறுதியாக இருந்த விஜய், அவ்வாறே செய்து படக்குழுவினரை அசத்தியதோடு, ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார்.
விஜயின் அந்த அதிரடி பைக் ரைடிங் வீடியோ இதோ,
நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் ❤
— UnBeatable Thalapathy Fanatics (@UTF_fanatics) August 4, 2019
நம்ம ஜனம் வெறித்தனம் 💥💥@actorvijay pic.twitter.com/ngTQJ2SP40
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...