‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூனம் கவுர், தற்போது ‘நண்டு என் நண்பன் என்ற படத்திலும், ஜித்தம் ரமேஷ் நடிக்கும் தலைப்பு வைக்காத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
தலைப்பு வைக்காத படத்தை ஆண்டாள் ரமேஷ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிரது. சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட பூனம் கவுர், திடீரென்று யாரிடமும் சொல்லாமல், தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு ஐதராபாத் சென்று விட்டார். அவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “இந்த படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை, இனி எதுவும் பேச வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
பாதி படப்பிடிப்பிலேயே ஹீரோயின் இப்படி எஸ்கேப்பானதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதோடு, தயாரிப்பாளருக்கு பல லட்சம் ரூபாய் நஷ்ட்டம் ஏற்பட்டதாக கூறியுள்ள இயக்குநர் ஆண்டாள் ரமேஷ், எங்கள் படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவராக பூனம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருடைய உடைகளை அவரே தேர்வு செய்வதக கூறினார். சரி என்றும். நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்துக் கொடுத்தோம். அவர் அதிக விலைக்கு உடைகள் வாங்க பணம் கேட்டார். இது சிறிய பட்ஜெட் படம் என்றோம். இதனால் பிரச்சினை செய்தார். தற்போது யாரிடமும் சொல்லாமல் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு போய் விட்டார். காரண்மும் தெரியவில்லை. என்று கூறினார்.
இந்த பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க உள்ளனர்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...