அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருக்கிறார். போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ரிலீஸ் தேதியான ஆகஸ்ட் 8 ஆம் தேதி சென்னையில் பல திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணி காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சிங்கப்பூரில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. அதாவது, இந்திய நேரப்படி நாளை (ஆகஸ்ட் 6) மாலை 5 மணிக்கு சிங்கப்பூரில் நேர்கொண்ட பார்வை படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறதாம். இதன் மூலம் நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் காட்சி சிங்கப்பூரில் திரையிடப்படுகிறது.
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...