Latest News :

ஆபாசம் நிறைந்த இணைய உலகத்தில் நடிகை மீனா!
Monday August-05 2019

இந்திய பொழுதுபோக்கு துறையில் வெப்சீரிஸ் வேகமாக வளர்ந்து வருகிறது. பல முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் வெப்சீரிஸ் தொடர்களில் ஈடுபட்டு வருவதால், திரைப்படங்களுக்கு நிகராக வெப்சீரிஸ்கள் உருவாகி வருகிறது.

 

அதே சமயம், திரைப்படங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் வெப்சீரிஸ்களுக்கு இல்லை என்பதால், படைப்பாளிகள் தாங்கள் நினைத்ததை முழுமையாக சொல்ல முடிகிறது. மேலும், சில வெப்சீரிஸ்களில் வசனங்களும், காட்சிகளும் ஆபாசம் நிறைந்தவைகளாகவும் இருக்கின்றன. ஆனால், தமிழ் வெப்சீரிஸ்களை பொருத்தவரை குடும்ப பொழுதுபோக்கு மற்றும் காமெடியை மையமாக வைத்தே வெப்சீரிஸ்கள் தயாரிக்கப்படுகிறது.

 

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, ‘கரோலின் காமாட்சி’ என்ற வெப் சீரிஸ் மூலம் இணைய உலகத்தில் அறிமுகமாகிறார்.

 

டிரண்ட் லவுட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜீ5 இணைந்து தயாரிக்கும் இந்த வெப் சீரிஸ் காமெடி நிறைந்த தொடராக உருவாக உள்ளது.

 

Actress Meena in Karolin Kamakshi Wed Series

 

இந்திய உளவுத்துறை அதிகாரியான காமாட்சியும், பிரெஞ்ச் உளவுத்துறை அதிகாரியான கரோலினும் இணைந்து, கடத்தல்காரர்களின் சிக்கியுள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலை பொக்கிஷத்தை மீட்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். கலாச்சாரத்தில், பழக்க வழக்கங்களில் மாறுபட்டு இருந்தாலும், பணியில் ஒத்துப்போகும் இவர்களது பயணத்தை காமெடியும், அதிரடியும் கலந்து சொல்லியிருக்கிறார்களாம்.

 

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தவரும், அருண் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘பாக்ஸர்’ படத்தின் இயக்குநருமான விவேக் குமார் கண்ணன், இந்த வெப் சீரிஸை இயக்குகிறார். பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். இவர்களுடன் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றுகிறார்கள்.

 

Karolin Kamakshi Web Series

 

இந்த வெப் சீரிஸின் துவக்க விழா மற்றும் போட்டோ ஷுட் இன்று பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இதில் மீனா, கரோலின் வேடத்தில் நடிக்கும் ஜியோர்ஜியா அன்ரியானி உள்ளிட்ட தொடர் குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

Related News

5404

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

Recent Gallery