Latest News :

ரகுமான் கடற்படை வீரராக நடிக்கும் ‘ஆபரேஷன் அரபைமா’
Monday August-05 2019

’துருவங்கள் 16’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘ஆபரேஷன் அரபைமா’. ரகுமான் இதில் கடற்படை வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ஹீரோயினாக ‘நாடோடிகள்’ அபிநயா நடிக்கிறார். இவர்களுடன் டினி டாம், கௌரி லஷ்மி ஷிஹாத், அரவிந்த் கலாதர், சஜி சுரேந்திரன், நேகா சக்சேனா, சாம்சன் டி.வில்சன், அனூப் சந்திரன், பாலாஜி, ரமேஷ், டேனி, மோகிதா பட்டக், மணிஷா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

 

பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட இயக்குநர் ப்ராஷ், இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்து இயக்குநர் ப்ராஷ் கூறுகையில், “நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது. சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்திற்கு கதையின் நாயகனாக ரகுமான் கிடைத்தது பெரிய பலம். நான் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரத்தை அச்சு அசலாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரகுமான். கதையின் நாயகியாக ‘நாடோடிகள்’ அபிநயா நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழிகளில்  மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில் நுட்பங்களுடன் வேகமாக உருவாகி வருகிறது.” என்றார்.

 

Operation Arapaima

 

ராகேஷ் பிரம்மானந்தம் இசையமைக்கும் இப்படத்திற்கு ஃபீனிக்ஸ் உதயன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜயகுமார், ஷைஜூ ஆகியோர் படத்தொகுப்பு செய்ய, முருகன் மந்திரம் பாடல்கள் எழுதுகிறார். ப்ராஷ், அரவிந்த் கலாதர், முருகன் மந்திரம் ஆகியோர் இணைந்து வசனம் எழுதுகிறார்கள். கேப்டன் அனில்குமார் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

Related News

5405

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

Recent Gallery