கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸின் 5 வது போட்டியாளராக ரேஷ்மா வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று சரவணன் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பது போட்டியாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் குறித்து கமல் பேசிய போது, கல்லூரி படிக்கும் போது பெண்களை உரசுவதற்காகவே நான் பேருந்தில் சென்றிருக்கிறேன், என்று சரவணன் கூறினார். இதை கேட்ட கமல் சிறித்ததோடு, அரங்கத்தில் இருந்தவர்களும் சிரித்தார்கள்.
ஆனால், சரவணனின் இத்தகைய பேச்சுக்கு பலர் கடும் கண்டம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக சரவணனும் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில், சரவணைன் பெண்கள் பேச்சை காரணம் காட்டி நேற்று அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து கமல் வெளியேற்றிவிட்டார். மேலும், பெண்கள் குறித்து கொச்சையாக பேசிய சரவணனுக்கு இது தண்டனை என்றும் அவர் கூறினார்.ஆனால், உண்மையில் சரவணன் வெளியேறியதற்கு இயக்குநர் சேரன் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் சேரனை, தரகுறைவாக சரவணன் பேசினார். இதற்கு இயக்குநர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சேனல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்கள். கூடவே இயக்குநர் சங்கமும் இந்த விவகாரத்தில் தலையிட்டதாலயே சரவணனுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...