எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகிறது. இன்று மாலை 5 மணிக்கு சிங்கப்பூரில் முதல் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத்தும், அஜித்தும் அடுத்தப் படத்திலும் இணைகிறார்கள். இப்படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக கூறப்பட்டது.
ஆனால், ரஹ்மான் இதை மறுக்கும் விதமாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், தான் எந்த புது படத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை, என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகள் அதிகமாக இருப்பதால், புது படங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் அஜித் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக வெளியான செய்திகள் வெறும் வதந்தி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘தல 60’ என்று அழைக்கின்றனர். இப்படத்திலும் அஜிட் ‘விஸ்வாசம்’ படத்தில் வந்தது போல வயதான தோற்றத்தில் வருவதாகவும், அவருக்கு மகளாக இளம்பெண் ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...