தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த பிரபாஸ், ‘பாகுபலி’ படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராகியுள்ளார். பாலிவுட்டில் பாகுபலி பெற்ற வெற்றியால், பிரபாஸின் படத்திற்கு அங்கே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, விரைவில் வெளியாக உள்ள பிரபாஸின் ‘சாஹோ’ பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ’சாஹோ’ படத்திற்காக பிரபாஸ் வாங்கிய சம்பளத்தை இதுவரை எந்த ஒரு இந்திய சினிமா நட்சத்திரமும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. முதலில், இப்படத்தின் லாபத்தில் ஒரு பங்கு அவருக்கு சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது சம்பளமாக ரூ.100 கோடி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் எந்தவித விளக்கமோ அல்லது மறுப்போ தெரிவிக்கவில்லை. மேலும், பிரபாஸின் இந்த அசுர வளர்ச்சியை பார்த்து பாலிவுட் ஸ்டார்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் ’சாஹோ’, ஆங்கிலப் படம் ‘மிஸன் இம்பாசிபல்’ பாணியில் சாகசங்கள் நிறைந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...