ஜெய் மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய செய்தியை அவ்வபோது அறிந்திருப்பீர்கள். ஆனால், தற்போது போதையில் 50 மும்பை அழகிகளுடன் அதிரடியாக நடனம் ஆடியிருக்கிறார். ஆம், ‘கேப்மாரி என்ற சி.எம்’ படத்திற்காக தான் ஜெய்யின் இந்த அழகிகளுடனான ஆட்டம் படமாக்கப்பட்டிருக்கிறது.
எஸ்.ஏ.சந்திரசேகரின் 70 வது படமாக உருவாகும் ‘கேப்மாரி’ ஜெய்யின் 25 வது படமாகும். இதில் வைபவி சாண்ட்லியா, அதுல்யா ரவி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார், சித்தார்த் விபின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான அரங்கம் வடிவமைக்கப்பட்டு, அதில், “என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா...என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா...” என்ற ஹரிசரண் பாடிய பாடலை 50 க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர் புல்லாக படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்காக ஜெய் மிக சிரந்தை எடுத்து சிறப்பாக நடனமாடியுள்ளார். தெறி, பேட்டை முதலான படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீப்ஃ மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
சித்தார்த் விபின் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜீவன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். வீரமணி கணேசன் கலையை நிர்மாணிக்கிறார்.
யாருமே எதிர்பாராத இளமை ததும்பும் காதல் கதையை கொண்ட இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், கூறியிருக்கிறார்.
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...