தமிழ் பிக் பாஸ் சீசன் 3 யில் நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு மூலம் பங்கேற்க போவதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, கஸ்தூரி இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரியாகிவிட்டார்.
கஸ்தூரி என்றாலே சர்ச்சை என்று பொருள், என்பது போல அவர் பேசும் அனைத்தும் சர்ச்சையாகி வருவதால், பிக் பாஸ் வீட்டில் அவர் எப்படி இருக்கப் போகிறார். சக போட்டியாளர்கள் அவரை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள், என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்றைய எப்பிசோட்டில் கஸ்தூரி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததுமே தனது வேலையை ஆரம்பித்துவிடுகிறார். அதாவது, சாக்ஷியை அழைத்து ”உங்க கிட்ட நான் நிறைய கேள்வி கேட்கனும்” என்று கூறுகிறார்.
சமீபகாலமாக கவினுடனான சாக்ஷியின் விளையாட்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கஸ்தூரி கையில் எடுப்பார் என்றும், சாக்ஷியை அவர் வெளுத்து வாங்கப் போகிறார், என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, கஸ்தூரியால் இனி பிக் பாஸ் வீடு ரனகளமாகவது உறுதி.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...