வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த ‘மாநாடு’ படத்தின் தலைப்பு விரைவாக அறிவிக்கப்பட்டாலும், படப்பிடிப்பு துவங்குவதில் மட்டும் தாமதம் நீடித்தது. இதையடுத்து அப்படம் டிராப்பாகிவிடும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுப்பு தெரிவித்ததோடு, ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கிவிடும், என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், ‘மாநாடு’ படம் டிராப்பாகிவிட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். மேலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு வேறு ஒரு பரிணாமத்தில் உருவாகும், சிம்புக்காக காத்திருந்தது வீணாகிவிட்டது, என்றும் அவர் இன்றைய அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு பதில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கதையை படித்த சிவகார்த்திகேயனுக்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம். அதே சமயம், சிம்பு நடிப்பதாக இருக்கும் கதையில் நான் எப்படி நடிப்பது, என்றும் அவர் யோசிக்கிறாராம். தற்போது சிம்பு நடிக்கப் போவதில்லை, என்பது உறுதியாகிவிட்டதால், சிவகார்த்திகேயன் ‘மாநாடு’ படத்தில் நடிக்கலாம், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வேறு சில முன்னணி ஹீரோக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். அதனால், ‘மாநாடு’ படத்தின் அடுத்த ஹீரோ யார்? என்பதை அவர் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...