கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’ இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, துருக்கி போன்ற நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பல்கேரியாவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு துருக்கி நாட்டிற்கு படக்குழுவினர் சென்ற போது, அவர்களை அந்நாட்டு பாதுகாப்பு படை எல்லையில் மடக்கியதோடு, நாட்டிற்குள்ளும் அனுமதிக்கவில்லை. முறையான ஆவணங்கள் அனைத்தையும் படக்குழுவினர் வைத்திருந்தாலும், சுமார் 24 மணி நேரத்திற்கு மேலாக படக்குழுவினர் எல்லையில் தவித்துள்ளனர். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு அங்கிருந்தவர்கள் சிலர் செய்த உதவி மூலம், தற்போது துருக்கி பாதுகாப்பு படையினரிடம் இருந்து விடுபட்டுள்ள துருவ நட்சத்திர படக்குழு, துருக்கி நாட்டிற்குள்ளும் நுழைந்துவிட்டதாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்து, விஷயத்தை அனைவருக்கு எடுத்துச் சென்றதற்கு நன்றியும் அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...