Latest News :

அஜித் சாருக்கு விருது நிச்சயம்! - பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நம்பிக்கை
Friday August-09 2019

’களவாணி 2’ படம் ரிலீஸுக்கு பிறகு கோடம்பாக்கத்தில் பரவலாக அடிபடும் பெயர் ‘பப்ளிக் ஸ்டார்’. யார் இவர்?, என்பது குறித்து நாம் ஏற்கனவே டீட்டய்லாக செய்தி வெளியிட்டோம். நம்மை போல பல தளங்களும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் பற்றி அவ்வபோது செய்தி வெளியிட்டு வருகிறது.

 

அந்த வகையில், தற்போதைய செய்தி பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் பற்றியது அல்ல, அவர் அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை பார்த்தது பற்றியது.

 

உலகம் முழுவதும் நேற்று வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அஜித் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். சினிமா பிரபலங்களும் படம் பார்த்து பாராட்டி வருகிறார்கள். அஜித்தின் வித்தியாசமான நடிப்பில், உருவாகியுள்ள இப்படத்தை ‘களவாணி 2’ வில்லன் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், முதல் நாள், முதல் காட்சி, ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கிறார். ’

 

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ”மற்றவர்களுக்கு எப்படி அஜித்தை பிடிக்குமோ அதுபோல் எனக்கும் அவரை பிடிக்கும். அவரை மட்டும் அல்ல, ரஜினி, கமல், விஜய், சூர்யா என்று அனைத்து ஹீரோக்களின் படங்களையும் நான் முதல் நாளே பார்த்துவிடுவேன். அப்படி தான் அஜித் சார் படத்தையும் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தேன்.

 

அஜித் சார், இதுவரை நடித்த படங்களில் ரொம்பவே வித்தியாசமான முயற்சி. அவர் நீதிமன்ற காட்சிகளில் நடித்தது இயல்பாக இருக்கிறது. நிச்சயம் அவரது நடிப்புக்கு விருது கிடைக்கும். படம் இளைஞர்களிடம் மட்டும் இன்றி பெண்களிடமும் வரவேற்பு பெறும்.” என்றார்.

 

அஜித்தின் நீதிமன்ற காட்சிகள் குறித்து பாராட்டும் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

5434

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

Recent Gallery