பல சீரியல்களில் நடித்தாலும் நடிகை ஸ்ரீதேவியை மக்களிடம் கொண்டு சேர்த்தது ‘ராஜா ராணி’ தான். இந்த சீரியலில் வில்லியாக நடித்து கல்லிய ஸ்ரீதேவி, ராஜா ராணி சீரியல் முடிந்த நிலையில், வேறு எந்த சீரியலிலும் ஒப்பந்தமாகாமல் ஓய்வில் இருக்கிறார்.
இந்த நிலையில், வார இதழ் ஒன்றின் இணையதளத்திற்கு நடிகை ஸ்ரீதேவி அளித்த பேட்டியில், ”எதிர்ப்பாரத விதமாகத் தான் நான் நடிக்க வந்தேன். ஆரம்பத்தில் எனக்கு நடிப்பை பற்றி எதுவும் தெரியாது. அப்படி இருக்கும் போது தயாரிப்பாளர் ஒருவர், “நீ ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் உன்னை தூக்கிடுவேன்” என்று மிரட்டினார். அதில் இருந்து தான் நடிப்பை சவாலாக எடுத்துக் கொண்டு நடித்தேன்” என்று கூறியிருக்கிறார்.
ஐடி துறையில் பணிபுரியும் அசோக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரீதேவி, தற்போது தனது கணவருடன் இல் வாழ்க்கையை சந்தோஷமாக கழித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் புதிய சீரியலோடு ரசிகர்களை சந்திக்கப் போகிறாராம்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...