Latest News :

வெளியானது நயன்தாராவின் புது படம்! - ரசிகர்கள் விமர்சனத்தால் படக்குழு அதிர்ச்சி
Saturday August-10 2019

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயின் என்ற பெருமையோடு, தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து அரும் நயன்தாரா, நடித்தாலே அந்த படம் வெற்றி என்ற டாக் திரையுலகில் இருக்கிறது. ஏன், அஜித்தின் ‘விஸ்வாசம்’ கூட நயன்தாரா நடித்ததால் தான், அவ்வளவு பெரிய வெற்றி பெற்றது, என்றெல்லாம் அவரது ரசிகர்கள் பெருமை பேசிக் கொண்டார்கள்.

 

இதற்கிடையே, நயன்தாராவின் நடிப்பில் உருவாகி சில பல சர்ச்சைகளை உருவாக்கிய படம் ‘கொலையுதிர் காலம்’. ’பில்லா 2’ என்ற படு மொக்கை படத்தை இயக்கிய சக்ரி டொலட்டி இயக்கியிருக்கும் இப்படம், வெளியீட்டு தயாராகி பல மாதங்கள் ஆனாலும், வியாபாரம் ஆகாததால் ரிலீஸ் ஆகாமலே இருந்தது. ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும் படம் மட்டும் ரிலீஸாகவில்லை.

 

இந்த நிலையில், வழக்கம் போல ஆகஸ் 9 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றும் காலை முதல் படம் வெளியாகவில்லை. பிறகு மாலை காட்சி ரிலீஸ் ஆனது. நயன்தாரா படம் என்பதாலும், வார இறுதி நாள் என்பதாலும், நேற்று மாலை ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே நயன்தாரா படத்திற்கு இருந்தது. படம் ஆரம்பிக்கும் போது இருந்த கூட்டம், இடைவேளை நெருங்கும் போது பாதியாக குறைந்தது, திரையரங்கில் இருந்த மற்ற ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. 

 

மேலும், முழு படத்தை பார்த்த பாதி பேரிடம், படம் எப்படி என்று கேட்டதற்கு, “நான் என் வாழ்நாளில் பார்த்த மிக மோசமான படம் இது தான்” என்று ஒருவர் கூறினார். மற்றொருவரோ, “போட்ட பணம் கைக்கு வராது என்று தெரிந்தே இந்த பட தயாரிப்பாளர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார், ஒண்ணுமே இல்லாத இந்த படத்தை அவர் ஏன் தயாரித்தார் என்றே தெரியவில்லை” என்று கூறினார்.

 

Kolaiyuthir Kaalam in Nayanthara

 

இப்படி, நயன்தாரா படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்திருக்கும், யாரும் எதிர்ப்பார்க்காத, இந்த மோசமான விமர்சனத்தால், ’கொலையுதிர் காலம்’ படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related News

5438

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

மக்கள் கொடுத்த வரவேற்பால் பல மொழிகளில் டப்பாகும் ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர்!
Monday July-28 2025

18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...

Recent Gallery