’அட்ட கத்தி’ தினேஷ் ஹீரோவாகவும், தீப்தி திவேஸ் ஹீரோயினாகவும் நடித்திருக்கும் படம் ‘நானும் சிங்கிள் தான்’. திரி இஸ் ஏ கம்பெனி (THREE IS A COMPANY) நிறுவனம் சார்பில் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கோபி இயக்கியிருக்கிறார்.
டேவிட் ஆனந்த்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு, ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்திருக்கிறார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றியவர். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். கனல் கண்ணன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஆண்டனி ஜோசப் கலையை நிர்மாணிக்கிறார். ஆதித்யன் எடிட்டிங் செய்ய, அபீப் உஷேன் நடனம் அமைத்திருக்கிறார்.
முழுக்க முழுக்க காதல், கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் புது மாதிரியான கிளைமாக்ஸ் காட்சி உள்ளதாம். அது ரசிகர்களை நிச்சயம் கவரும், என்று இயக்குநர் கோபி கூறுகிறார். மேலும், மொட்ட ராஜேந்திரன் லண்டன் தமிழ் டானாக காமெடியில் கலக்கியிருக்கிறாராம். மொத்தத்தில், இப்படம் ரசிகர்களுக்கு காமெடி விருந்தாக அமையும் விதத்தில் உருவாகி உள்ளதாம்.
சென்னை, லண்டன் மற்றும் யூரோப் நாடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. படத்தை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...