Latest News :

தலீத் குறித்து பா.ரஞ்சித் கருத்து - சீமானின் ஆணவ பதிலும், பேச்சும்!
Tuesday September-12 2017

மாணவி அனிதா தற்கொலையை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் திரைத்துறையினர் பல்வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக போட்டங்கள் நட்த்தி வருகிறார்கள். அதே சமயம் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

 

சென்னையில் திரைப்பட உதவி இயக்குநர்கள் ஏற்பாடு செய்திருந்த அனிதா அஞ்சலி நிகழ்வில், ஜாதி தொடர்பாக இயக்குநர்கள் அமீர் மற்றும் பா.ரஞ்சித் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், ரஞ்சித் பேசியது குறித்து, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது, சீமான் ரொம்ப ஆணவமாகவும், ரஞ்சித்தை மட்டம் தட்டியும் பேசியிருப்பது, மேலும் பரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அனிதாவுக்காக போராட வந்திருக்கும் மக்கள் தலீத் பிரச்சினைக்காகவும் போராட வேண்டும், தலித்துகளுக்கு பிரச்சினை வரும்போது இந்த மக்கள் எங்கிருகிறார்கள் என்று தெரியவில்லை, என்ற ரஞ்சித்தின் குமுறல் குறித்து சீமானிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்க, மனுஷன் ரொம்பவே டென்ஷனோடு, “நாங்க தமிழனா பார்க்கிறோம், நீங்க தலித்தா பார்க்கிறீங்க, நீங்க தமிழனா தலித்தா? என்று கேள்வி எழுப்பினார்.

 

இதை தொடர்ந்து நிருபர் ரஞ்சித் கூறிய கருத்தை சீமானுக்கு புரிய வைக்கும் விதத்தில் கேள்வியை அழுத்தமாக கேட்க, உடனே கோப்படும் சீமான், அவன் ஒரு ஆளு அவன பத்தி என்கிட்ட கேட்கிறீங்க, அவன் என்ன அம்பேத்காரா? என்று கேட்பதோடு, பொருளாதாரம் கல்வி ஆகியவை உயர்ந்தால் தலித் என்பது தானாக மறைந்துவிடும், என்கிறார்.

 

மேலும், இளையராஜா, இயக்குநர் ஞானராஜசேகரன் உள்ளிட்ட சில பிரபலங்களின் பெயரை சொல்லி, இவர்கள் வீட்டில் தலித் பிரச்சினை இருக்கிறதா? காரணம் அவர்களின் பொருளாதாரம் உயர்ந்துவிட்டதால், தலித் என்பது மறைந்துவிட்டது, என்கிறார்.

 

மேலும், தலித் என்பவர்கள் காலகாலமாக் ஒதுங்கி தான் இருக்கிறார்கள், அவர்களை நாங்கள் தான் அரவணைக்கிறோம், என்ற ரீதியில் பேசிய சீமான், விஞ்ஞானத்தின் மூலமாகவும் ஜாதி வேறுபாடு ஒழியும் என்பதோடு, தமிழ் தேசியம் என்ற ஒன்றின் மூலம் பயணித்தால் ஜாதி இருக்காது என்பதால் நாங்கள் அவ்வழியில் பயணிக்கிறோம். அதுபோல, ஜாதி பிரச்சினை ஒழிய என்ன வழியோ அந்த வழியில் ரஞ்சித் பயணிக்க வேண்டும், அப்படி அவ்வழி தெரியவில்லை என்றால், ஓரமாய் உட்கார வேண்டும், என்றும் கூறியுள்ளார்.

 

இப்படி ஆக்ரோஷமாக பேசியிருக்கும் சீமான், ரஞ்சித் சின்ன பையன், அவன் வெறும் சினிமாவில் மட்டும் தான், என்பதோடு, ரஞ்சித் என்ற பெயரை கேட்டாலே தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி, ஆணவமக பேசுபவர், அவ்வபோது நக்கலாகவும் ரஞ்சித்தை விமர்சித்திருக்கிறார்.

 

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் : சீமான் வீடியோ

Related News

544

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery