ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் யோகி பாபு!
Saturday August-10 2019

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, ஹீரோவாக நடித்த ‘தர்மபிரபு’, ‘கூர்கா’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து, யோகி பாபுவை மையமாக வைத்து வெளியாகும் அடுத்தப் படம் ‘காதல் மோதல் 50/50’.

 

ஆக்‌ஷன் கலந்த பேய் படமாக உருவாகி வரும் இப்படத்தில் முதல் முறையாக யோகி பாபு அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளில் ஈடுபட்டு, ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.

 

அலெக்சாண்ட கதை எழுத, பிரபல கன்னட திரைப்படம் ‘த்ரயா’ இயக்குநர் கிருஷ்ணா சாய், திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஸ்டண்ட் இயக்குநர் பில்லா ஜெகன், யோகி பாபுவிற்காக பிரத்யேகமான பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். தரண் குமார் இசையமைத்திருக்கிறார்.

 

Yogi Babu Kadhal Modhal

 

மு.மாறன், இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் ‘கண்ணை நம்பாதே’ படத்தை தயாரிக்கும் வி.என்.ஆர் தனது லிபிசினி கிராப்ட்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

 

படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீஸரை படக்குழுவி விரைவில் வெளியிட உள்ளது.

Related News

5441

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery