வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி!
Sunday August-11 2019

பிரபல கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை திரைப்படமாகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக 800 விக்கெட்களை முரளிதரன் வீழ்த்தியிருப்பதால். இப்படத்திற்கு 800 என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

 

மேலும், இப்படத்தில் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களும், விஜய் சேதுபதி, முரளிதரன் வேடத்தில் நடிக்க கூடாது, என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள்.

 

இதனால், முரளிதரன் வேடத்தில் நடிக்கலாமா, வேண்டாமா, என்பது குறித்து விஜய் சேதுபதி ஆலோசித்து வருவதாகவும், அவர் நடிக்க மாட்டார், என்றும் கூறப்பட்டது. ஆனால், இதற்கு விஜய் சேதுபதி எந்த விளக்கும் கொடுக்கவில்லை.

 

இந்த நிலையில், முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை, என்பது வெறும் வதந்திதான் என்பதை விஜய் சேதிபதியே தற்போது தெளிவுப்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மெல்போர்ன் திரைப்பட விழாவில் விருது பெற்ற விஜய் சேதுபதி, முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தில் தான் நடிக்க இருப்பதாகவும், அப்படம் யாருடைய மனதையும் புன்படுத்தாத படமாக இருக்கும், என்று தெரிவித்தார்.

Related News

5447

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery