கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள ‘இந்தியன் 2’ பல தடைகளை கடந்து வந்திருக்கிறது. படம் கைவிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அனைத்து பிரச்சினைகளையும் முடிவடைந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 12) முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, சித்தார்த், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். இப்படத்திற்காக சித்தார்த் தொடந்து ஒரு வருடம் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
இந்த நிலையில், ‘இந்தியன் 2’ வில்லனாக நடிகர் பாபி சிம்ஹா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், டெல்லி கணேஷ் பிரியா பவானி சங்கர், சித்தார்த் ஆகியோர் ‘இந்தியன் 2’ படத்திற்காக ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தற்போது பாபி சிம்ஹாவும் இணைந்துள்ளாராம். இவர் கமலுக்கு வில்லனாக நடிக்கிறாராம்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...