மாதவனை வைத்து ‘இறுதிச் சுற்று’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த பெண் இயக்குநர் சுதா கொங்காரா, அடுத்ததாக சூர்யாவை இயக்க உள்ளார்.
‘நானும் ரவுடி தான்’ படத்த இயக்கிய விக்னேஷ் சிவன், இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்கு பிறகு சூர்யாவை இயக்க செல்வராகவன் ஒப்பந்தமாகியிருந்தது. ஆனால், எப்போதும் போல, சொதப்பிய செல்வராகவன், ‘மன்னவன் வந்தானடி’ படத்தை முடிக்க தாமதப்படுத்தி வர, இந்த இடைவெளியில் ஒரு படத்தை முடித்துவிடலாம் என்று திட்டமிட்ட சூர்யா, அதற்காக கதை கேற்க தொடங்கினார்.
பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த சூர்யா, ‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்காராவின் கதையை ஓகே செய்து, படப்பிடிப்பை டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டார். ஆனால், செல்வராகவன் அதற்குள்ளாக தனது படத்தை முடித்துவிட்டால் சிக்கலாகிவிடும் என்பதால், சுதாவின் படத்தை உடனடியாக தொடங்க சூர்யா முடிவு செய்துள்ளார்.
சுதா கொங்காரா - சூர்யா இணையும் படத்திற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகி, படப்பிடிப்பும் உடனடியாக தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் முடியும் முன்பாகவே செல்வராகவன், தனது படத்தை முடித்துவிட்டால், அவருடனும் சேர்ந்து பணியாற்ற சூர்யா முடிவு செய்துள்ளாராம்.
ஆக, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு பிறகு ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிக்க சூர்யா தயாராகிவிட்டார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...