கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 50 நாட்களை கடந்திருக்கும் நிலையில், இந்த முறை யார் டைடில் வின்னராக வருவார்? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய எலிமினேட்டில் ஏற்கனவே சொன்னது போல சாக்ஷி வெளியேற்றப்பட்டுவிட்டார். தற்போது இருக்கும் போட்டியாளர்களில் அடுத்ததாக வெளியேறப் போவது அநேகமாக மதுமிதாவாக தான் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் டைடில் வின்னர் பற்றிய தகவலும் கசிந்துள்ளது. பிக் பாஸ் 3 யின் டைடில் வின்னராக தர்ஷன் தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. சக போட்டியாளர்களும் இதை ஏற்றுக் கொண்டாலும், தர்ஷனுக்கு ரசிகர்களிடையே மவுசு அதிகரித்து வருகிறது.
மேலும், பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ் டைடில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் சீசனில் நடிகை ரித்விகா வெற்றி பெற்றார். இந்த மூன்றாவது சீசனில் நிச்சயம் வெற்றியாளராக ஆண் போட்டியாளர் தான் இருப்பார். அப்படி பார்த்தால், கவின் பிக் பாஸ் சீசன் 3 டைடிலை நிச்சயம் கைப்பற்றுவார் என்று கூறப்படுகிறது.
அதே சமயம், கவின் சாண்டி ஆகியோரும் டாப் 3 லிஸ்ட்டில் இடம்பெறுவார்கள் என்று பிக் பாஸ் போட்டியாளர்களே எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால், கவின் அடுத்த எலிமினேஷன் ரவுண்டில் வெளியேற்றப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...