Latest News :

விஜய் சேதுபதிக்கும் இருக்கும் தெளிவு ரஜினிக்கு இல்லையா?
Monday August-12 2019

அரசியலில் ஈடுபட்டிருக்கும் ரஜினிகாந்த், இதுவரை தனது கட்சி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாலும், தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிடுவேன், என்று அறிவித்திருக்கிறார். அதே சமயம், தமிழக பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்காத அல்லது தாமதமாக கருத்து தெரிவிக்கும் ரஜினிகாந்த், பா.ஜ.க அரசின் திட்டங்களுக்கு, நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவிப்பதை மட்டும் தனது கடமையாகக் கொண்டிருக்கிறார்.

 

பண மதிப்பிழக்க நடவடிக்கை உள்ளிட்ட பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து வரவேற்பு தெரிவித்து வரும் ரஜினிகாந்த், சமீபத்தில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு வரவேற்பு தெரிவித்ததோடு, பிரதமர் மோடியையும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அமித்ஷாவையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

 

இந்த நிலையில், இதே காஷ்மீர் விவகாரம் குறித்து வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் விஜய் சேதுபதி, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, ஜனநாயக விரோதமானது, என்று கூறியிருக்கிறார்.

 

மேலும், ”பெரியார் அன்னைக்கே சொல்லிட்டாரு அவங்கவங்க பிரச்சினைகளுக்கு அவங்கவங்க தான் தீர்வு காண முடியும். உங்கள் வீட்டின் மீது நான் அக்கறை செலுத்தலாம், ஆனால் ஆளுமை செலுத்த முடியாது, கூடாது.” என்றும் காஷ்மீ விவகாரம் குறித்து விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.

 

காஷ்மீர் விவகாரம் குறித்து விஜய் சேதுபதியின் இந்த கருத்து, உலக மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், மத்திய அரசின் நடவடிக்கை என்றாலும், தவறு என்றால் தவறு தான், என்பதை விஜய் சேதுபதி தைரியமாக சுட்டிக்காட்டிருப்பதையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

 

அதே சமயம், மூத்த நடிகரான ரஜினிகாந்து மட்டும் என்றுமே மக்களின் உணர்வுகளை மதிக்காமல், மத்திய பா.ஜ.க அரசின் மீது தனக்கு இருக்கும் அளவற்ற பாசத்தை காட்டுவதற்காக, காஷ்மீர் விவகாரத்தை வரவேற்று பேசியிப்பதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கிறது. இதனால், அரசியலில் விஜய் சேதுபதிக்கு இருக்கும் தெளிவு கூட ரஜினிகாந்துக்கு இல்லையோ, என்று சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

 

தூத்துக்குடி போராட்டத்தையே காட்டுமிராண்டி தனம் என்று சொன்னவர் தானே நடிகர் ரஜினிகாந்த்!

Related News

5453

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

மக்கள் கொடுத்த வரவேற்பால் பல மொழிகளில் டப்பாகும் ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர்!
Monday July-28 2025

18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...

Recent Gallery