தமிழ் சினிமாவால் நிராகரிக்கப்பட்ட வித்யா பாலன்! - யாருக்கும் தெரியாத சீக்ரெட்
Monday August-12 2019

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யா பாலனுக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தாலும், அவர் அனைத்தையும் நிராகரித்து வந்த நிலையில், தற்போது அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் போனி கபூருக்காக தான் அவர் இந்த வேடத்தில் நடித்தாராம்.

 

அதே சமயம், வித்யா பாலன் பல தமிழ்ப் படங்களில் வாய்ப்புகளை நிராகரித்தாலும், ஒரு காலத்தில் தமிழ் சினிமா அவரை நிராகரித்ததாம். அதை எண்ணி அவர் பல நாட்கள் வருத்தப்பட்டிருக்கிறாராம்.

 

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய வித்யா பாலன், மாதவன் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ படத்தில் ஹீரோயினாக தேர்வு செய்து, மேக்கப் டெஸ்ட் எல்லாம் நடந்து முடிந்த நிலையில், என்னை நிராகரித்து விட்டார்கள். அதேபோல், ’மனசெல்லாம்’ படத்திலும் என்னை ஒப்பந்தம் செய்து பிறகு நீக்கிவிட்டார்கள். அது என் மனதே வெடித்துவிடுவது போலாகிவிட்டது.” என்று கூறியிருக்கிறார்.

 

அதே சமயம், ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

Related News

5454

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery