வைபவின் ‘சிக்ஸர்’ படத்திற்கு யு சான்றிதழ்!
Tuesday August-13 2019

வைபவ், பல்லோக் லாலாவானி நடிப்பில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள படம் ‘சிக்ஸர்’. ராதாரவி, இளவரசு, சதீஷ், ராமர், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ளார்.

 

வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை சமீபத்தில் பார்த்த சென்சார் குழுவினர், பாராட்டு தெரிவித்ததோடு, அனைத்து தரப்பு மக்களும் பார்க்க கூடிய படம் என்பதற்கான யு சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள்.

 

இது குறித்து தயாரிப்பாளர் தினேஷ் கூறுகையில், “கதையை கேட்டக் மாத்திரத்திலேயே இந்த கதை எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படம் என்பதையும், அதற்கான தர சான்றிதழையும் பெறும் என்பதில் உறுதியாக இருந்தேன். குடும்பத்தோடு திரை அரங்குக்கு வரும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ள அறிமுக இயக்குனர் சாச்சியின் இந்த கதை ஜனரஞ்சகமான படமாக  இருக்கும் என்பதில் ஐயமில்லை.கதாநாயகன் வைபவுக்கு ஏற்ற கதாபாத்திரம். நகைச்சுவை மிளிர நடிப்பதற்கு ஒரு தனித்துவமான திறமை வேண்டும், அதில் வைபவ் மிக மிக திறமையானவர். தயாரிப்பாளராக நானும் எனது நண்பர் ஸ்ரீதரும் படத்தை பார்த்து மிக மிக மகிழ்ச்சி அடைந்தோம். அந்த மகிழ்ச்சி ரசிகர்களுக்கும் கிட்டும் என்பதில் ஐயமில்லை.” என்றார்.

 

வால் மேட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜோமின் படத்தொகுப்பை கவனிக்க, பசர் என்.கே ராகுல் கலையை நிர்மாணித்திருக்கிறார். சாம் மற்றும் ராம்குமார் நடனம் அமைக்க, ஜி.கே.பிலோகன், அன்பு ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.

Related News

5458

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery