விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘நெருப்புடா’ படம் ரசிகர்களின் அமோக ஆதரவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதுடன், பல்வேறு பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
தீயணைப்புத் துறை மற்றும் தீயணைப்பு வீரர்களை களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை பார்த்துவிட்டு ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருவதோடு, தீயணைப்பு வீரர்கள் பலர், ‘நெருப்புடா’ படத்தையும், ஹீரோ விக்ரம் பிரபுவையும் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், நெருப்புடா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விக்ரம் பிரபு சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்ப, அதற்கு விக்ரம் பிரபு, “என் தலைவி ஓவியா இல்லாத வீட்டிற்கு நான் வரமாட்டேன்” என்று பதில் தெரிவித்தார்.
அவரது இந்த பதிலால் கவரப்பட்ட அத்தனை ஓவியா ரசிகர்களும், தற்போது விக்ரம் பிரபுவின் ரசிகர்களாகிவிட்டார்கள்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...