விஜய் சேதுபதிக்காக கதை கேட்காமல் ஓகே சொன்ன தன்ஷிகா!
Tuesday August-13 2019

‘புறம்போக்கு’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுடன் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி இணைந்திருக்கும் படம் ‘லாபம்’. இப்படத்தில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் நிலையில், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க தன்ஷிகா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

 

ஏற்கனவே, எஸ்.பி.ஜனநாதனின் ‘பேராண்மை’ படத்தில் நடித்திருக்கும் தன்ஷிகா, இந்த முறை அவரிடம் கதை கூட கேட்காமல் ஓகே சொல்லிவிட்டாராம். காரணம், விஜய் சேதுபதி படம் என்பதால்.

 

இது குறித்து தன்ஷிகா கூறுகையில், “இப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஜனநாதன் சார் சொல்லவும், கதையே கேட்கவில்லை. ஏன் என்றால், அவர் மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை. சினிமாவிற்கான அரிச்சுவடியைக் கற்றுக்கொண்டதே அவரிடம் இருந்து தான். பேராண்மை படத்தில் எப்படி ஒரு மாணவி போல அவரிடம் கற்றுக்கொண்டேனோ அதேபோல் இந்த லாபம் படத்திலும் கற்று வருகிறேன். பேராண்மைப் படத்தில் நான் நடித்ததிற்கும் இப்படத்தில் நடிப்பதற்கும் இடையில் எனக்குள்ள கான்பிடண்ட் லெவல் கூடி இருப்பதை உணர முடிகிறது. இப்போதெல்லாம் என்னுடைய சினிமா பார்வையை ஸ்பாட்டில் சொல்லும் தைரியம் எனக்குள் வந்திருக்கிறது. அதற்கான காரணம் ஜனநாதன் சார் தரும் உற்சாகம். அவர் நம்மிடையே நிறைய விசயங்களை ஷேர் பண்ணுவார். அதேபோல் நாம் சொல்லும் விசயங்களை கவனமாக கேட்பார். சரியாக இருந்தால் அதை கன்சிடர் பண்ணுவார். அவர் இயக்கிய எல்லா படங்களும் எனக்கு விருப்பமான படங்கள். குறிப்பாக ஈ, இயற்கை இரண்டும் மிகவும் பிடிக்கும். இப்படத்தில் விஜய்சேதுபதியை மக்களுக்கு ரொம்ப  பிடிக்கும். அவர் ஒவ்வொரு படங்களிலும் தனது வெவ்வேறு பரிணாமங்களை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். மக்களும் ரசிக்கிறார்கள். லாபம் படத்தில் தயாரிப்பாளராகவும் சிறப்பாக நடந்து கொள்கிறார். எனக்கு எது சரின்னு படுகிறதோ அதைச் செய்து வருகிறேன், என்று வெளிப்படையாகச் சொல்லும் நேர்மையாளர் அவர். இப்படத்தில் என் கேரக்டர் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. காரணம் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை விட கதைக்கான முக்கியத்துவம் கொடுப்பவர்  ஜனநாதன் சார். அப்படி கதைக்கு முக்கியத்துவம் உள்ள அவரது  படத்தில் நாம் இருந்தால் நிச்சயம் நம் கதாபாத்திரம் முக்கியமானதாகத் தான் இருக்கும். மேலும் இப்போது பெண்கள் முதன்மை பாத்திரம் ஏற்று நடிக்கும் படங்கள் அதிகமாக வருகிறது. மக்களும் அதைக் கொண்டாடி வருகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லாபம் படத்தை  தியேட்டரில் வந்து பார்க்கும் போது உங்கள் மனதில்  தோன்றும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். ‘இப்படம் சமூகத்திற்கான லாபம்’” என்றார். 

 

Dhanshika

 

இப்படத்தை விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

Related News

5465

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery