பிக் பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்களுக்கு இடையே பெரும் சண்டை நடந்து வருகிறது. சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் வனிதா, எப்போதும் போல தனது வேலையை தொடங்கிவிட்டதால், அவரால் சக போட்டியாளர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை நடக்கிறது.
அந்த வகையில், வனிதா அபிராமையை தூண்டிவிட்டதன் எதிரொலியாக முகேனுக்கும், அபிராமிக்கும் இடையே பெரிய சண்டை நடந்து வருகிறது. ஆத்திரத்தில் முகேன் நாற்காலியை தூக்கி அடிக்க முயன்றது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ஆனால், இந்த சண்டையில் நடந்த சம்பவம் ஒன்றை பிக் பாஸ் குழுவினர் மறைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், முகேன் வனிதாவை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதை ஒளிபரப்பினால் பெரிய சர்ச்சையாகிவிடும் என்பதால், பிக் பாஸ் மறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்னவே, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக சில சமூக ஆர்வலர்கள் போராட தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற அடிதடி சம்பவங்கள், அதுவும் ஆண் போட்டியாளர் பெண் போட்டியாளரை அடிக்கும் சம்பவங்கள் நடப்பது வெளியே தெரிந்தால், மீண்டும் போலீஸ், விசாரணை வரும் என்பதால், முகேன் வனிதாவை அடித்ததை மறைத்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...