நடிகரின் விமர்சனம்! - தேர்தலில் போட்டியிடுவாரா சூர்யா?
Thursday August-15 2019

நடிப்பு மற்றும் தயாரிப்பு என சினிமாவில் பிஸியாக பயணித்துக் கொண்டிருக்கும் சூர்யா, அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பல உதவிகளை செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழை மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புக்கு அகரம் பவுண்டேஷன் உதவி வருகிறது.

 

இதற்கிடையே மத்திய அரசின் புதிய கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா, 30 மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் புதிய கள்வி கொள்கையை நடைமுறை படுத்துவதில் அவசரம் காட்டக்கூடாது, என்றும் கூறியிருந்தார்.

 

சூர்யாவின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க பிரமுகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகரும், பா.ஜ.க பிமுகருமான எஸ்.வி.சேகர், தற்போது சூர்யாவை விமர்சித்திருக்கிறார்.

 

புதிய கொள்கையை நடைமுறை படுத்துவதில் அவசரம் காட்ட கூடாது, என்று சொல்வதற்கு சூர்யாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. வேண்டுமென்றால் அவர் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நிதானமாக படம் எடுத்துக் கொள்ளட்டும் அதை யாரும் கேட்கப் போவதில்லை, என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

 

மேலும், சூர்யா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிறகு வந்து அவர் பேசட்டும். தன் பிள்ளைகள் காபி குடிக்க மாட்டார்கள் என்று பேசும் சிவகுமார் அவர்களை காபி விளம்பரங்களில் நடிக்க கூடாது, என்று சொல்வாரா. ஊருக்கு தான் சுபதேசம், என்று எஸ்.வி.சேகர் காட்டமாகவும் விமர்சித்திருக்கிறார்.

 

SV Sekar

 

பா.ஜ.க தலைவர்கள் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போது, புதிய கல்வி கொள்கை குறித்து தான் குருட்டு தனமாக கருத்து சொல்லவில்லை. கல்வியாளர்களுடன் பல முறை கலந்து பேசிய பிறகே அப்பிரச்சினை குறித்து பேசினே, என்று ஏற்கனவே விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது எஸ்.வி.சேகர், அவரை தேர்தலில் நின்று வெற்றி பெற்று பேசட்டும், என்று விமர்சனம் செய்திருப்பதற்கு சூர்யா, பதிலடியாக தேர்தலில் நிற்பாரா? என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Related News

5474

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery