ரஜினி அரசியலுக்கு வந்தால், அடுத்த எம்.ஜி.ஆர் அவர் தான், என்று பேசி வந்த அவரது ரசிகர்களும், அவர் மீது சிறு நம்பிக்கை வைத்திருந்த நடுநிலை வாதிகளும், அவர் அரசியலுக்கு வருகிறேன், என்று அறிவித்ததில் இருந்து, அவர் மீது நம்பிக்கை வைத்தது தவறு, என்று எண்ணி வருகிறார்கள்.
காரணம், தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசாமல் இருக்கும் ரஜினிகாந்த், தொடர்ந்து பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பேசி வருவதோடு, தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காமல், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். அதில் இருந்து தான் தமிழக மக்கள் அவர் மீது பெரும் கோபம் கொண்டனர்.
ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாத ரஜினிகாந்த், தான் பா.ஜ.க-வின் கைப்பாவை என்பதை நிரூபிக்கும் வகையில், அவ்வபோது பா.ஜ.க அரசின் திட்டங்களுக்கும், பிரதர் மோடியின் நடவடிக்கைக்கும் வரவேற்பு தெரிவித்து வருகிறார். அந்த அகையில், காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டியவர், பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் வெகுவாக புகழ்ந்து பேசினார்.
ரஜினியின் இந்த புகழ்ச்சி, தமிழக எதிர்க்கட்சிகளை கோபப்பட வைத்ததோடு, அவரது மக்கள் மன்ற நிர்வாகிகளையும் கடுப்பாக்கியுள்ளது. இதனால், ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிருப்தியடைந்திருப்பதோடு, ரஜினியிடம் இருந்து கழட்டிக் கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர், ”ரஜினிகாந்த் தற்போது பா.ஜ.க முகமாகவே மாறி வருகிறார். எனவே ரஜினி அரசியலுக்கு வருவதே தமிழக பா.ஜ.கவை காப்பாற்றத் தான் என்பதும் அவர் பின்னணியில் பா.ஜ.க இருப்பதும் தெளிவாக தெரிந்து விட்டது. ரஜினி நிச்சயம் பா.ஜ.க.வுக்காக ஓட்டு கேட்பார். ஆனால் நாங்கள் அந்த முட்டாள்தனத்தை நிச்சயம் செய்ய மாட்டோம். பா.ஜ.கவுக்கு ஓட்டு கேட்டு சென்றால் மக்கள் விரட்டி விரட்டி அடிப்பார்கள். இது தெரிந்து தான் பா.ஜ.கவை கழட்டி விடும் முடிவுக்கு அதிமுக வந்துவிட்டது. தெரிந்தே சுயலாபத்துக்காக ரஜினி பா.ஜ.கவை நோக்கி சென்று அவர்கள் வலையில் விழுந்து விட்டார். இன்னும் சொல்ல போனால் எங்களுக்கு விருப்பமே இல்லாமல் எங்களை அவர்களிடம் அடகு வைக்க பார்க்கிறார். இதற்கு தலைவர் அரசியலுக்கு வராமலேயே இருந்து இருக்கலாம்.” என்று புலம்ப தொடங்கியிருக்கிறார்கள்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...