’மத கஜ ராஜா’, ‘ஆம்பள’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சுந்தர்.சி, விஷால் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்திற்கு ‘ஆக்ஷன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் வெளியாகத ஒரு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விஷால், மிலிட்டரி கமாண்டோ அதிகாரியாக நடிக்கிறார்.
ஒரு உண்மையை கண்டுபிடிக்க பல நாடுகளுக்கு பயணிக்கும் விஷால், அங்கே எதிர்கொள்ளும் சவால்களை தனது அதிரடியான ஆக்ஷன் மூலம் சமாளிக்கும் காட்சிகளை விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த ஆக்ஷன் காட்சிகளாக சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் அமைத்திருக்கிறார்கள்.
‘கே.ஜி.எப்’ படத்திற்காக சமீபத்தில் சிறந்த சண்டைப்பயிற்சியாளர்களுக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கும் அன்பறிவ் மாஸ்டர்களின் ஆக்ஷன் காட்சிகள் பெரிதும் பேசப்படும் விதத்தில் அமைந்திருக்கிறதாம்.
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவிசந்திரன் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு துருக்கி, அசார்பைசான், கேப்படோசியா, பாகு, இஸ்தான்புல், தாய்லாந்து, பேங்காக் போன்ற இடங்களில் 50 நாட்களும், இந்தியாவின் ஜெய்ப்பூர், ரிஷிகேஷ், டேராடூன், ஐதராபாத், சென்னை போன்ற இடங்களில் 50 நாட்களும் நடைபெற்றுள்ளது.
இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்க, யோகி பாபு, ராம்கி, சாயா சிங், ஷாரா, பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சுபா, வெங்கட் ராகவன், சுந்தர்.சி ஆகியோர் திரைக்கதை எழுதும் இப்படத்திற்கு பத்ரி வசனம் எழுத, கதை எழுதி சுந்தர்.சி இயக்கியிருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, டியூட்லீ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். துரைராஜ் கலையை நிர்மாணிக்க, ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்திருக்கிறார். பிருந்தா, தினேஷ் நடனம் அமைக்க, பா.விஜய், ஹிப் ஹாப் தமிழா பாடல்கள் எழுதியுள்ளார்கள்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...