மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடித்திருக்கும் ‘சுமோ’ நவம்பர் மாதம் ரிலீஸ்!
Thursday August-15 2019

’வணக்கம் சென்னை’ படத்தை தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் ’சுமோ’. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். எஸ்.பி. ஹோசிமின் இயக்கியிருக்கிறார்.

 

இந்தோ-ஜப்பானிஸ் படமான 'சுமோ' சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  முதல் இந்தியத் திரைப்படம். ஜப்பானில் பாடல் காட்சிகள் & படபிடிப்பு நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் 35 நாட்கள் படபிடிப்பு அங்கே நடத்தி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

 

இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் நடித்திருக்கிறார். வழக்கம்போல் யோகி பாபுவின் நகைச்சுவை இந்த படத்திலும் கலைக்கட்டியுள்ளது குழந்தை முதல் வயதானவர் வரை ரசிக்கக்கூடிய ஜனரஞ்சகமான திரைப்படம் இது. 

 

நடிகர் சிவா இந்தப்படத்திற்கு கதாநாயகனாக மட்டுமின்றி முதல் முறையாக  திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது .இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்  திரைக்கு வர இருக்கிறது.

Related News

5482

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery