”எல்லை மீறி செல்கிறது” - கோபத்தில் நித்யா மேனன்
Friday August-16 2019

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய சினிமாவில் நடித்து வந்த நித்யா மேனன், ‘மிஷன் மங்கள்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கிறார். அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் டாப்ஸி, வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

சுதந்திர தினத்தன்று வெளியாகியிருக்கும் இப்படம் குறித்து நடிகை நித்யா மேனன் அவ்வபோது பதிவிட்டு வருகிறார். தனது சமூக வலைதளப்பக்கத்தில் ‘மிஷன் மங்கள்’ படம் குறித்த தகவல்களை, ரிலிஸிற்கு முன்பும், பின்பும் நித்யா மேனன் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

 

இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளா குறித்து எந்த ஒரு பதிவையும் வெளியிடாத நித்யா மேனன், தான் நடித்த படம் குறித்து மட்டுமே தொடர்ந்து பதிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், இதை வைத்து நித்யா மேனனை பலர் ட்ரோல் செய்யவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், தன்னைப் பற்றி வெளியாகும் ட்ரோல்களை பார்த்து கோபமடைந்திருக்கும் நித்யா மேனன், இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வீடியோவில், ”வழக்கமாக இதுபோன்ற ட்ரோல் வந்தால் கண்டுக்கொள்ள மாட்டேன். ஆனால், இனிமேலும் பொறுக்க முடியாது. எல்லை மீறி செல்கிறது. முதலில் கண்ணாடியை பார்த்து நீங்கள் என்ன செய்தீர்கள், என பாருங்கள். நான் சமூக வலைத்தளத்தில் கேரள வெள்ளம் குறித்து பதிவிடவில்லை என்பதற்காக, உதவி ஏதும் செய்யவில்லை என அர்த்தமில்லை:” என்று நெட்டிசன்களுக்கு காட்டமாக பதில் அளித்திருக்கிறார்.

Related News

5484

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery